ஈரோடு : ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வரும் முருகானந்தம் அவர்களின் சிறப்பான சேவையை பாராட்டி, ஜனவரி 2026 குடியரசு தின விழாவில் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இந்த விழாவில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி, ஐ.ஏ.எஸ். மற்றும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி சுஜாதா ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை பேணுவதில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. இந்தப் பாராட்டு, காவலர் முருகானந்தம் அவர்களின் அர்ப்பணிப்பு சேவைக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாகும்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

N.செந்தில்குமார்
















