இணைய பாலியல் மோசடி : ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியரின் அந்தரங்க புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை எடுத்து வைத்து மிரட்டி பணம் பறித்ததாக அல்லது பாலியல் மோசடிகளில், ஈடுபட்டதாக பல செய்திகளை அண்மை காலங்களில் பார்க்க முடிகிறது. பாலியல் மோசடி என்பது இணையத்தில் நடைபெறும் பாலியல் குற்றமாகும். இதில் இணைய குற்றவாளிகள் ஒருவரின் அந்தரங்க மறைக்கப்பட்ட பாலியல் தகவல்களை வெளியிடுவதாக மிரட்டி அவரிடம் இருந்து பணம், பாலியல் இச்சை உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். இந்த மோசடி, வசதி படைத்த மத்திய வயது ஆண்கள் தனியாக வாழும் பெண்கள் பெரியோரின் மேற்பார்வையில், இல்லாத குழந்தைகள் மற்றும் சமூக வலைதளங்கள், அல்லது இணையதளங்களில், அதிக நேரம் செலவிடும் இளைஞர்கள் குறி வைத்து நடத்தப்படுகிறது. குற்றவாளிகள் சில வாரங்கள் அல்லது மாதங்கள் கூட எடுத்துக்கொண்டு தங்களது இலக்குகளை கண்டறிகின்றனர். பின் அவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து மோசடியில் ஈடுபடுகின்றனர்.
குற்றவாளிகள் இணையம் மற்றும் சமூக வலைதளங்களில், வசீகரிக்கும் தோற்றமுடைய பெண்ணின் உருவம் கொண்ட போலி அடையாளங்களை உருவாக்குகின்றனர். அந்த அடையாளம் உண்மைதான் என்று பிறரை நம்ப வைப்பது போன்று, சுய விவரங்கள் கொடுக்கப்படுகின்றன. மேலும் இணையத்தில், அந்த பெண் தொடர்ந்து இயங்குவது போன்ற நடவடிக்கைகளில், ஈடுபடுகின்றனர். அந்தப் பெண்ணின் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு மற்றவர்களை நம்ப வைக்கின்றனர். பின் ஏமாற்றுவதற்காக தாங்கள் தேர்ந்தெடுத்த நபருக்கு அந்தப் பெண்ணின், வலைதளகணக்கிலிருந்து நட்பு கோரிக்கையை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், அல்லது டேட்டிங், மற்றும் திருமண இணையதளங்கள், மூலம் அனுப்புகின்றனர். பின் அவர்களை தங்கள் நோக்கத்திற்கு ஏற்றவாறு உளவியல், உத்தி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக மூளை சலவை செய்து அவரின் நம்பிக்கையை பெற்று பின் மோசடியை நிகழ்த்துகின்றனர். குறிப்பாக இளம் வயதினரை அவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி வீடியோ அழைப்புகளின் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு தூண்டுகின்றனர்.
பொதுவாக இந்த மோசடி கும்பல் பெண்களின் துணையுடனே இயங்குகிறது. மோசடி கும்பலில், உள்ள பெண்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் நபரை ஆபாச வீடியோ அழைப்புகளில் ஈடுபடுத்தி அவற்றை பதிவு செய்யும் செயலைகள் மூலம் பதிவு செய்து சேகரித்து வைக்கின்றனர். இந்த பதிவு செய்யப்பட்ட வீடியோ துணுக்குகள் சம்பந்தப்பட்ட நபரை மிரட்டுவதற்கு பயன்படுகிறது. இது பாதிக்கப்படுவோருக்கு வெளியே செல்ல முடியாத மனவேதனையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் 70 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட் ஃபோன்கள், பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இணைய பாலியல் மோசடிக்காரர்கள் தங்களது குற்றகரங்களில் விரிவு செய்வதற்கும் ஏதுவான இறைகளும் இங்கே அதிகம் இருக்கின்றன.
நம் சமூகத்தில் நிலவிவரும் பாலியல் விருப்பங்கள் குறித்த அதீத பாசாங்கு தனமும் பாலியல் செயல்பாடுகளில், இழுக்காக கருதும் மனோபாவமுமே ஒருவரை ரகசியமாக, இந்த குற்றங்களில் சிக்க வைப்பதற்கான தளத்தை உருவாக்கித் தருகின்றன. இனிய பாலியல் மோசடி ஒருவருக்கு மன வேதனையை ஏற்படுத்தக் கூடியதாக அவரின் வாழ்க்கையையே அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறது இந்த குற்றம் ஒரு மனித உரிமை மீறலாகும் இது பாதிக்கப்பட்டவருக்கு அவமானம் மற்றும் சமூக இழிவு குறித்த அச்சத்தையே எரிபொருளாக கொண்டு நிகழ்த்தப்படுகிறது வழக்கமாக பாதிக்கப்படுவோர் தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்ட பிறகு தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வருகிறது
இணைய பாலியல், மோசடியின் வளர்ச்சி : இணைய பாலியல் மோசடி என்பது 2006ம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை நான்கு கட்டங்களாக வளர்ச்சி கண்டுள்ளது.
முதல் தலைமுறை, இணைய பாலியல் மோசடி : முதல் தலைமுறை இணைய பாலியல் மோசடியில், பெரும்பாலானோர் பெண்களை பாதிக்கப்படுவோராக இருந்தனர். அவர்களை காதலித்து பிரிந்து சென்ற ஆண்கள் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைப்பில், இருந்த போது அவர்களின் விருப்பத்தின் பேரில் அல்லது அவர்களுக்கு தெரியாமலோ, எடுத்துக்கொண்ட அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி மோசடியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு தொடக்க கால பதிவு சாதனங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தனர்.
இரண்டாம் தலைமுறை, இணைய பாலியல் மோசடி : இதில் மோசடி செய்யும் ஆண்கள் அழகான பெண்களின், அடையாளங்களை கொண்ட போலி கணக்குகளை இணையத்தில் உருவாக்குவர் இதன் மூலம் ஆண்களை கவர்ந்து குரல் மாற்றும் செயலியின் உதவியுடன் ஆண் குரலை பெண் குரலாக மாற்றி இனிய அழைப்புகள் மூலமாக அவர்களுடன் பேசுவர் பின் பின் வாட்ஸ் அப், மூலம் ஆபாச உரையாடல் நிர்வாண வீடியோ, அழைப்புகள் என இலக்குகளை பொறியில் சிக்க வைத்து அவர்களிடமிருந்து பணத்தை கரந்து விடுவர். இந்த மோசடியில், திரைபதிவு, வீடியோ எடிட்டிங், உருவத்தை மாற்றக்கூடிய செயலைகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
மூன்றாம் தலைமுறை, இணைய பாலியல் மோசடி : இந்த மோசடியில், ஈடுபடும் கும்பல் பிறரை ஏமாற்றுவதற்காக அழகான பயிற்சி அளிக்கப்பட்ட பெண்களை பணிக்கு அமர்த்தினர். இது மோசடியின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இருந்தது. இந்த வகையான ஏற்பாடுகள் பாலியல், இணைய மோசடியை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் என்ற நிலைக்கு கொண்டு சென்றது. போலி வங்கி கணக்குகளுக்கு பதில் மோசடிக்காரர்கள், கிரிப்டோ கரன்சி வாலட்டுகளை, பயன்படுத்தினர். மோசடிக்காரர்களுக்கு மறைவு தன்மையை வழங்கியது,,,,,,,, அதனால் அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிப்பதும் எளிதாக இருந்தது.
நான்காம் தலைமுறை, இணைய பாலியல் மோசடி : நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் நடைபெறும் இந்த மோசடியில், ஒருவரை ஏமாற்றி வலையில் சிக்க வைக்கவோ பெண்களைப் பணிக்கு அமர்த்தி ஏமாற்றி வேலையில், ஈடுபடவோ தேவையில்லாமல் ஆகிவிட்டது. ஆள்மாறாட்டம் மற்றும் போலி நிறுவனம் ஆகிய தொழில்நுட்பங்கள் ஒருவர் ஆன்லைனில் பாலியல் செயல்பாடுகளில், ஈடுபடாமல் அவர் ஈடுபட்டது போல சித்தரித்து மக்களை மோசடிக்கு உள்ளாக்குவதை உறுதி செய்கிறது.
ஆள் மாறாட்டம், மற்றும் போலி நிர்வாணம் : ஆள் மாறாட்டம் என்பது செயற்கை நுண்ணறிவின் துணைக் கொண்டு இயங்கும் ஒரு தொழில்நுட்பமாகும். இது ஒருவரின் முக அமைப்பை கற்றறிந்து அந்த முகத்தை மற்றொருவரின் முகமாக துல்லியமாக மாற்ற உதவுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், குற்றவாளிகள் ஆபாச பட நடிகர்களின் வீடியோக்களை எடுத்து அதில் மற்றொருவரின் முகத்தை இணைத்து போலி வீடியோவை உருவாக்குகின்றனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆபாச வீடியோவில், உள்ள நடிகரின் முகத்தில் பாதிக்கப்பட்டவரின் முகத்தை பொருத்தி அவர் வெளிக்காட்டும் உணர்வுகள் முகபாவனைகள் உடல் மொழி, ஆகியவற்றை துல்லியமாக இணைத்து விடுகிறது, இதனால் அந்த போலி வீடியோ பார்ப்பதற்கு உண்மையானது போலவே தோற்றமளிக்கிறது.
போலி நிர்வாண செயலிகளும் இத்தகைய குற்றங்களில், ஈடுபடுவதற்கு பயன்படுத்தப் படுகின்றன. இந்த செயலிகள் உண்மை போலவே உள்ள பெண்களின் ஃபோலின் நிர்வாண புகைப்படம், அல்லது வீடியோக்களை சில நொடிகளில், உருவாக்கி விடுகின்றன. ஒரு போலி நிர்வாண வீடியோவை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட பெண்ணின் சுயவிவரம் மற்றும் உடல்வாகுடன் பொருந்தக்கூடிய ஆபாச வீடியோவை தேடவேண்டியது இல்லை, ஆள் மாறாட்ட செயலிகளும் உடனுக்குடன் குறைபாடற்ற இந்த கொடிய வீடியோக்களை உருவாக்கித் தந்து விடுகின்றன. திரை பிரபலங்களான ஏஞ்சலினா ஜூலி, எம்மா வாட்சன், ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், உள்ளிட்ட பலர் இதுபோன்ற போலி நிர்வாண வீடியோக்களுக்கு இறையாகி உள்ளனர்.
ஒருவர் இனிய பாலியல் மோசடிக்கு உள்ளாகிறார், என்பதற்கு எச்சரிக்கை தரும் அறிகுறிகள் : ஆன்லைனில் நாம் பார்க்கும் ஒரு நபரின் விவரங்கள் போலியானது போல தோன்றுகிறதா, அவர்கள் கூறும் தகவல்களில் ஏதோ உண்மை இல்லை என்பது போல தெரிகிறதா? நீங்கள் ஆன்லைனில் சந்திக்கும் ஒருவர் உங்கள் அடையாளம் நீங்கள் வசிக்கும் இடம், உங்கள் பள்ளி அல்லது உங்கள் குடும்பத்தினர் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் குறித்து அதிகம் கேள்விகளை எழுப்புகிறார்களா? மோசடிக்காரர்கள் உங்களிடம் பேசும் தோரணை கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் அடையும், நீங்கள் அவர்களை சந்தித்த இணையதளம் தனிநபர் பாதுகாப்பு நிரம்பியதாக இருந்தால், அவற்றிலிருந்து உங்களை வேறு இணையத்திற்கு மாற்ற அதிக முயற்சி மேற்கொள்வார்கள்.
அவர்கள் அதிகம் பாலியல் தொடர்பான மொழிகளை பேச தொடங்குவர், மேலும் உங்களையும் கட்டாயப்படுத்துவர். உங்களிடம் வீடியோ அழைப்பில் பேச வேண்டும் என அடிக்கடி தொந்தரவு செய்வர். மேலும் சங்கடமான கோரிக்கைகளை செய்யும்படி வற்புறுத்துவர். நீங்கள் இதற்கு முன் அவர்களிடம் உரையாடிய முறையில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் நீங்கள் அவரைப் பார்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தால், நேருக்கு நேர் அவர்களுடைய முகத்தை காட்டுவதே தவிர்க்கும் பொருட்டு கேமரா சரி இல்லை, என்பதை போன்ற காரணத்தை கூறுவர் நேரில் சந்திப்பதை தவிர்க்க அடிக்கடி புகைப்படங்களை, மட்டும் அனுப்புவர்.
இணைய பாலியல், மோசடிகளின் வகைகள் : மோசடியில் ஈடுபடுபவர்கள் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த அவரது அந்தரங்க வீடியோக்களையோ, புகைப்படங்களையோ பெற சில வழிமுறைகளை பின்பற்றுவர் அது ஒருவரை நம்ப வைத்து வேண்டுகோள் மூலம் வீடியோக்களை பெறுவதாகவும் இருக்கலாம். சட்ட விரோதமான செயல்களில், ஈடுபடும் வீடியோக்களை பெறலாம். அவை குற்றவாளி ஒருவரிடம் நிர்வாண புகைப்படத்தை அனுப்பும்படியோ, அந்தரங்க வீடியோ அழைப்பில் பங்கேற்கும்படி ஊக்குவிப்பார். பிறகு அவற்றை பதிவு செய்து வைத்துக் கொள்வார். குற்றவாளி ஒரு நபரின் சாதாரண புகைப்படத்தை பெற்று அவற்றை ஆபாசமாக உருமாற்றுவார்.
இதனையே நாம் ஆள் மாறாட்டம் என்கிறோம். பாதிக்கப்பட்ட நபரின் அந்தரங்க புகைப்படம், வீடியோவோ தம்மிடம் இருப்பதாக கூறுவார். ஆனால் அவரிடம் இருக்காது ஒருவரின் புகைப்படத்தையோ, அல்லது வீடியோக்களையோ, சட்ட விரோதமான செயல் பாடுகளின் மூலம் பெரும் முயற்சியில், ஈடுபடுவார் குற்றவாளி பாதிக்கப்பட்டுரின் முன்னாள் காதலராகவோ, அல்லது துணைவராகவோ, கூட இருக்கலாம். பாதிக்கப்பட்டவருடன் உறவில் இருந்தபோது அவருடைய அனுமதியுடன் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு, அவற்றை பயன்படுத்தலாம் குற்றவாளிகள் உங்கள் வீட்டிலோ, கழிவரையிலோ, அல்லது உடை மற்றும் உங்கள் அறையிலே கூட ரகசிய கேமராக்களை வைத்து உங்கள் அந்தரங்களை புகைப்படம் ஆகவோ, அல்லது வீடியோவாகவோ எடுக்கலாம்.
நீங்கள் பாதிக்கப்பட்டால், என்ன செய்ய வேண்டும் : முதலில் பயம் கூடாது, உங்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் மோசடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை உணருங்கள். அந்த சம்பவத்திலிருந்து வெளிவருவதற்கு குழந்தைகளுக்கு ஆதரவு தேவைப்படும் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். பாதிக்கப்பட்டவர்கள் மோசடிக்காரர்கள் கேட்கும் தொகையை கொடுத்து விட்டாலும், அவர்கள் பதிவு செய்து வைத்த தகவலை இணையத்தில், வெளியிட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, என்பதை தான் கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன. அவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து மேலும் சில தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான கோரிக்கைகளை வைக்கலாம் குற்றவாளிகளுக்கு பதில் அளிப்பதை தவிருங்கள், அவர்களுக்கு பதில் அளிப்பது மூலம் உங்களை பயமுறுத்தினால் வேண்டிய தொகையை தவிர்த்து விடுவீர்கள், என்ற எண்ணத்தை அவர்களுக்கு நீங்கள் விதைக்கிறீர்கள், உங்கள் குழந்தைகளின் ஒத்துழைப்பு பெற்று மோசடிக்காரர்களுடன் அனைத்து உரையாடலையும் ஆவண படுத்துங்கள், உங்கள் குழந்தைகளின் சமூக வலைதள பக்கங்களை பாதுகாப்பாக வையுங்கள் அவற்றை யாரும் பார்க்காதபடி தனிநபர் பாதுகாப்பை அளித்து அவர்களுடைய அனைத்து சமூக வலைதள கணக்குகளுக்கும் இரண்டு அடுக்கு அங்கீகாரம் தரும் பாதுகாப்பை செயல்படுத்துங்கள் நீங்கள் சந்திக்கும் தேவையில்லா நடத்தைகளை, அந்தந்த சமூக வலைதளங்களில் உடனடியாக புகார் அளித்து தெரியப்படுத்துங்கள். உங்கள் மாநில காவல் துறையின் இணைய கூட்டத்துறையை ”சைபர் கிரைம் டிபார்ட்மென்ட்” அணுகி அவர்களிடம் உங்கள் குழந்தைகளுக்கு நடைபெற்ற மோசடி குறித்து புகார் அளிக்கலாம்.
உங்கள் குழந்தைகளை ஆன்லைன் அரட்டை அல்லது ஆன்லைன் இணை தேடுதலில் ஈடுபடாமல் இருக்க அறிவுறுத்துங்கள். ஆன்லைனில் ஒருவர் சொல்வதை உறுதி செய்யாமல் அவற்றை அப்படியே நம்பி தவறாக நடத்தைகளில் ஈடுபடாமல், இருக்க அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். அவர்களுடைய அந்தரங்க புகைப்படங்களையும் வீடியோக்களையோ யாரிடமும் எந்த ஆன்லைன் தளங்கள் மூலமும் பகிரக்கூடாது என்பதை வலியுறுத்துங்கள். ஆன்லைன் காதலினால், பலர் குழிக்குள் விழுந்த சம்பவங்களை எடுத்துக் கூறுங்கள் இணையம் என்பது போலி முகப்பு புகைப்படங்கள் போலி அடையாளங்கள் உண்மை இல்லாத நோக்கங்களை கொண்ட மனிதர்கள் உலாவும் இடமாகும் நிலையில்லா உணர்வுகளையும் தெளிவில்லா கடந்த கால நடத்தைகளையும் கொண்ட இந்த இணைய குற்றவாளிகள் ஒருவரிடம் இருந்து பணம் கறக்கவும், அவர்களை அவமானப்படுத்தவும், யாரையாவது தேடிக் கொண்டே இருக்கிறார்கள். என்பதை எடுத்து கூறுங்கள் டிஜிட்டல் பாதுகாப்பு தனிநபர் தகவல்களை பாதுகாக்கும் கருவிகள் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை குறித்து உங்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.