திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தின் போது தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சரிவர கொண்டாடப்படுவதில்லை.
இந்த நிலையில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தந்தை பெரியாரின் 145 வது பிறந்த நாள் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநீதி காவல் தினமாக கொண்டாடப்பட்டது.
இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தந்தை பெரியாரின் உருவப் படத்தை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து சமூகநீதி காப்போம் தீண்டாமை ஒழிப்பும் மனித நேயத்துடன் நடப்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் வாசிக்க அனைத்து அதிகாரிகளும் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மீனா பிரியதர்ஷினி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
திருவள்ளுர் இருந்து குடியுரிமை நிருபர்
V.கோபி