கோவை : கோவை ஒண்டிப்புதூரில் சேர்ந்த பிரேம்குமார் என்பவர், அவரது தாத்தா வீட்டில் வசித்து வருகிறார். அவர் கடந்த ஒரு வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 12 மணி அளவில், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இது சம்பந்தமாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், சம்பவ இடம் சென்று பிரேம்குமார் இடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர் கீழே இறங்க மறுத்து விட்டதால், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை காவலர்கள் பெரியசாமி மற்றும் நந்தகுமார் ஆகியோர், செல்போன் கோபுரத்தின் மீது ஏறி பிரேம்குமார் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் நற்செயலை பாராட்டி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அர.அருளரசு ஐபிஎஸ் அவர்கள் நேரில் சென்று நற்பணி சான்று வழங்கி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்