பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று 09.02.2022ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள், காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு.ஆரோக்கியபிரகாசம், திரு. பாண்டியன் ஆகியோர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கவேல் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட ஆயுதப்படை ஆகியவற்றில் பணிபுரியும் காவல் துறையினர் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து இதன் கீழ் கண்டவாறு உறுதிமொழி
எடுத்துக்கொண்டனர்.
உறுதிமொழி:
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிக பொருளாக்குதலும் வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும் கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாய பணிக்கு வற்புறுத்தும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு. சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும். கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும்.
எந்த தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும். கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறு வாழ்விற்காக பணியாற்றுவேன் என்றும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயல்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும் நான் உளமார உறுதி கூறுகிறேன்”
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.