பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு பள்ளியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கிரிதர் அவர்கள் தலைமையில் காவல் சிறுவர் மன்றம் சார்பாக சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு குறித்தும், பொது இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்கள்.
இந்த விழிப்புணர்வு முகாமில் 14 தலைமை ஆசிரியர்கள், 58 ஆசிரியர்கள் மற்றும் 877 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் இந்த விழிப்புணர்வு முகாமை சிறப்பாக நடத்திய காவல் சிறுவர் மன்றம் ஒருங்கிணைப்பாளர் திரு. சி.இரவிச்சந்திரன் மற்றும் சாரண மாணவர்கள் 1. சிராஜ்தீன், 2. வெங்கடேஷ், 3.பிரபாகரன், 4.ரெங்கநாதன் ஆகியோர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கிரிதர் அவர்கள் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி