பெரம்பலூர்: நல்ல மனிதர்களை உருவாக்கும் திறமை சிறந்த புத்தகத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை நன்கு அறிந்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் முக்கிய இடங்களில் நூலகத்தினை தொடங்க உத்தரவிட்டதின் அடிப்படையில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.A.சரவணசுந்தர் இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில், முதற்கட்டமாக இன்று 02.02.2022-ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் கைகளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோலைநகரில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் மேற்பார்வையில், பெரம்பலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு.ஆரோக்கியபிரகாசம் அவர்கள் நூலகத்தினை திறந்து வைத்தார்.
இந்த நூலகத்தில் மாணவர்களின் எதிர்காலத்திற்கும், இளைஞர்களின் வாழ்க்கையினை நெறிமுறைபடுத்தும் வகையிலும், இல்லதரசிகளின் பொழுதினை இனிமையாக்கும் வகையிலும், சிறுவா்களின் கற்பனை திறனை மேம்படுத்தும் வகையிலும், முதியவர்களின் பொழுதினை பயனுள்ளதாக மாற்றும் வகையில் புராணகதைகளும், போட்டித் தேர்விற்கு தயராகும் நபர்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு அவர்களின் வாழ்க்கைமுறை கோட்பாடுகள் மற்றும் பொது அறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய நூல்களும் உள்ளன. இதனை பொது மக்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியின் போது மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சந்தியா, கைகளத்தூர் காவல்துறையினர் மற்றும் சோலை நகர் கிராம பொது மக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை