பெரம்பலூர் : திருச்சி சரக காவல் துணைத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் சீரிய முயற்சியால் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் தலைமையில் இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு குழந்தை திருமணம், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டங்கள் மற்றும் இணைய வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான “காவலர் குழுமம்” என்ற அமைப்பினை பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 5 அரசு பள்ளிகளில் திருச்சி சரக காவல் துணைத் தலைவர் திரு. பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் இன்று 29.01.2020 காலை 11.30 மணிக்கு பெரம்பலூர் JK மஹாலில் தொடங்கி வைத்து காவலர் குழுமத்தின் நோக்கத்தினை பற்றி மாணவ மாணவிகளிடம் சிறப்புரையாற்றினார். இதில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறியது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி