பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம், ஊறல் & எரிச்சாராயம் ஆகியவற்றை தயார் செய்தல், விற்பனை செய்தல் மற்றும் சாராய பாட்டில் ஆகியவை விற்பனை செய்தல், கடத்தல், பதுக்கல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி* அவர்களின் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலையத்திலும் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராய விற்பனையை தடுக்க அதிரடி வேட்டை நடத்தப்பட்டது.
இந்நிலையில் மங்களமேடு காவல் நிலைய ஆய்வாளர் (பொ) திருமதி.கலா அவரது காவல் நிலைய காவலர்களுடன் சாராய வேட்டைக்கு புறப்பட்டு பல்வேறு கிராமங்களில் சோதனை நடத்தினார்.
அப்போது பாக்கெட்டில் சாராயம் விற்று கொண்டிருந்த சின்னசாமி 30/21 S/0 பரமசிவம் , வடக்குத்தெரு,புது ஒட்டத்தெரு,மங்களமேடு என்பவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து சுமார் 25 லிட்டர் அளவுள்ள 44 பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்தனர்.
பின்னர் காவல் ஆய்வாளர் அவர்கள் மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் அரசால் தடை செய்யப்பட்ட சாராயத்தை யாரேனும் விற்பனை செய்வதாக தெரிந்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண் 9498100690 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். இரகசியம் காக்கப்படும்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை