பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் தலைமையில் இன்று பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குற்ற நிகழ்வுகளை தடுப்பதற்கான நடைமுறைகள் மற்றும் விபத்துகளை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் கடந்த மாதத்தில் நடந்த திருட்டு வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளியை கண்டுபிடித்த விரல் ரேகை பிரிவைச் சேர்ந்த திரு.சிவமணி, துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆய்வாளர்களான திரு.விஜய் மற்றும் திரு.சுர்ஜித் ஆகியோர்களுக்கும், சாலையில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை மடக்கி பிடித்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து எண்-2 யை சேர்ந்த திரு.ஆனந்தன் சிறப்பு உதவி ஆய்வாளர், த.கா. திரு.இராமசாமி, மு.நி.காவலர்களான திரு.செல்லமுத்து மற்றும் சரண்ராஜ் ஆகியோர்களுக்கும், டாஸ்மாக் கடையை உடைத்து மதுவை திருடிய நபர்களை கண்டுபிடிக்க உதவிய காவல்துறை மோப்பநாய் படை பிரிவிலுள்ள காவலர் திரு.சக்திவேல் அவருக்கும், புகையிலை விற்பனை செய்த நபர்களை கண்டுபிடிக்க உதவிய மருவத்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு த.கா திரு.அன்பழகன், மற்றும் அறுவை சிகிச்சைக்காக தனது குருதியை கொடுத்து பெண்ணின் உயிரை காப்பாற்றிய காவலர் திரு.சீனிவாசன், பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை ஆகியோர்களின் நற்செயலினை பாராட்டி மேலும் சிறப்பாக பணியாற்றிட பாராட்டு சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்கள்.