பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையை தடுக்கும் வகையில் சிறப்பு மது விலக்கு ரோந்து அலுவல் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெரம்பலூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் குரு லாட்ச் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.நித்யா அவர்கள் நிலைய போலீசாருடன் சென்று விசாரணை செய்ததில் அங்கு சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்த பெரம்பலூர் மாவட்டம் அய்யலூரை சேர்ந்த பொன்னுசாமி, குரும்பபாளையம் கிராமத்தை சேர்ந்த சங்கர் மற்றும் அரணாரை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 368 மது பாட்டில்களும், பணம் ரூபாய் 57,600த்தையும் கைப்பற்றி மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி