பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு மது விலக்கு ரோந்து அலுவல் மேற்க்கொள்ளப்பட்டது. இதில் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி தனியாக மது விற்பனை செய்த பல்வேறு நபர்களை கைது செய்தனர். அந்த வகையில் இன்று பெரம்பலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பழனிச்சாமி மற்றும் நாகராஜ் ஆகிய இருவரையும் பெரம்பலூர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.நித்யா அவர்கள் கைது செய்து, விசாரணைக்குபின் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
துரிதமாக நடவடிக்கை எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் மற்றும் ஆய்வாளர் நித்திய அவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி