பெரம்பலூர் : பெரம்பலூர் நகரைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் (42) த/பெ பொன்னுசாமி பாரதி நகர், பெரம்பலூர் என்பவர் விளாமுத்தூர் ரோட்டில் கஞ்சா விற்று கொண்டிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் படி பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மனோஜ் காவல்நிலைய காவலர்களுடன் மேற்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தவரை பிடித்து நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து ரூபாய்.1000 மதிப்புள்ள 200 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றி மேற்படி குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.