கோவை : கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சூலூர் செங்கத்துறை ரோடு மதியழகன் நகரில் வசித்து வருபவர் சுப்பாத்தாள் வயது (65). உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தவர் மயங்கி விழுந்து இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேற்படி உடலில் எந்த காயங்களும் இல்லை என்று கூறப்படுகிறது மேலும் சடலத்தை இ எஸ் ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்