திருச்சி: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும் இரண்டாம் நிலைக்காவலர்(2599) சிறைக்காவலர்(86) மற்றும் தீயணைப்புதுறை காவலர்(674) (ஆண்/பெண்) என மொத்தம் 3359 பதவிகளுக்கான முதன்மை எழுத்துதேர்வு கடந்த (10.12.2023)-ந்தேதி தமிழகம் ழுழுவதும் 35 தேர்வு மையங்களில் நடைபெற்றது. மேற்கண்ட எழுத்துதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், அடுத்தக்கட்ட தேர்வுகளுக்காக தேர்வாணையத்தால் திருச்சி மாநகரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 800 பெண் போட்டியாளர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடல் அளவீட்டு சோதனை, சகிப்புதன்மை மற்றும் உடற்தகுதி தேர்வுகள் ஆகிய தேர்வுகள் திருச்சி மாநகரம் கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் (06.02.2024)-ந்தேதி முதல் (10.02.2024)-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் 800 பெண் போட்டியாளர்கள் கலந்து கொள்ள தேர்வாணையத்தால் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
அதில் இன்று 265 பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்ட தேர்வில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உயரம் சரிபார்த்தல், பின்னர் 800 மீட்டர் ஓட்டம் என மொத்தம் 3 பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்பட்டது. இது போன்று நாளையும் தேர்வு நடத்தப்பட உள்ளது. மேற்கண்ட 3 பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகின்ற (08.02.2024) மற்றும் (09.02.2024) ந் தேதிகளில் நீளம்
தாண்டுதல், பந்து எறிதல், 100/200 மீட்டர் ஓட்டம் என 3 பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இன்று (06.02.2024) ந் தேதி தேர்வில் கலந்து கொண்ட 265 போட்டியாளர்களுக்கு நடைபெற்ற CV. PMT, PET & ET தேர்வில் பெண் போட்டியாளர்களின் தேர்வினை முன்னின்று நடத்தும் Super Check Officer / திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப அவர்கள் நேரில் மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தும், பணியில் இருந்த காவல் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்கள்.