திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் சட்டவிரோதமாக பாண்டி சாராயம் மற்றும் மதுபாட்டில் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்ட முக்கிய பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை திருத்துறைப்பூண்டி காவல் சரக பகுதிகளில் சட்டவிரோதமாக பாண்டி சாராயம் மற்றும் மதுபாட்டில் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்ட விளக்குடி அன்பு@ அன்பு 51/2021 க/பெ.சிவராஜ், வெள்ளாளர் தெரு, விளக்குடி திருத்துறைப்பூண்ட என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் தனிப்படை அமைத்து
கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டார்கள். இதனை தொடர்ந்து
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரை மற்றும் அதிரடி நடவடிக்கையின்பேரில் மேற்படி குற்றவாளி அன்பு இன்று (27.12.2021) குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேற்படி குற்றவாளியை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிறப்பாக பணிபுரிந்த திருத்துறைப்பூண்டி உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.சோமசுந்தரம், திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் திரு.கழனியப்பன் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா