தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் காவல் நிலைக்குட்பட்ட பண்டாரவடையில் வசித்து வரும் செல்வமணி (60), (கணவர் சீனிவாசனின் இரண்டாவது மனைவி) என்ற பெண் சாமியார் அதே பகுதியில் வாழைத்தோப்பு எனும் இடத்தில் சொந்தமாக சிறிய அளவில் மாரியம்மன் கோயில் ஒன்று வைத்து இதில் காலை,மாலை வேளைகளில் குறி சொல்வது ,மாந்திரீகம் போன்றவற்றிலும் ஈடுபாட்டு தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் கடந்த மார்ச் 24-ஆம் தேதியில் இருந்து காணவில்லை என்றும் அவர் வசித்து வரும் வீட்டில் இருந்து துர்நாற்றம் அடிப்பதாகவும் அவரின் மகன் குமார் மற்றும் கிராமவாசிகள் பாபநாசம் காவல் நிலையத்தில் (மார்ச் – 28) நேற்று புகார் அளித்தார்கள் அதனை தொடர்ந்து உடனடியாக அந்த வீட்டுக்கு சென்ற போலீசார் பூட்டிய வீட்டை உடைத்து பார்த்தபோது உள்ளே ஒரு குவளை பாத்திரத்திலிருந்து துர்வாடை வந்தது அதனை திறந்து பார்த்த போது அது உள்ளே செல்வமணி உடல் தலையில் காய்ந்த ரத்தத்துடன் அழுகிய நிலையில் இருந்தது அதனை தொடர்ந்து பாபநாச உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.பூரணி மற்றும் காவல் ஆய்வாளர் கலைவாணி சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அதன் பின்னர் போலீசார் இறந்த உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடந்து இக்கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளி உடனடியாக கைது செய்ய பாபநாச உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. பூரணி உத்தரவு பிறப்பித்தார் இதன் அடைப்படையில் காவல் ஆய்வாளர் திருமதி கலைவாணி மற்றும் கபிஸ்தலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார் மற்றும் அய்யம்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராஜேஷ் குமார், மற்றும் காவலர்கள் ஆகியோர் CCTV கேமரா தொலைபேசி எண்களை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்ட பெண் சாமியார் செல்வமணியின் கணவரின் முதல் மனைவி சுந்தரவல்லி மகளான ஜெயலட்சுமி (29), திருமணமானவர் (க/பெ ரமேஷ் ) இவர்களுக்கு மித்திரன் என்ற ஆண் குழந்தை (3) உள்ளது இவர்தான் தனது சின்னம்மா செல்வமணி தனது தவறான நடத்தையை பற்றி கண்டித்ததால் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொலை செய்துள்ளார் என்பதை கண்டுபிடித்தார்கள் தொடர்ந்து போலீசார் குற்றவாளியை கைது செய்தார்கள்.மேலும் வீரசிங்கப்பட்டையில் உள்ள அவரது கணவர் வீட்டில் சோதனை இட்டதில் அவரது அம்மாச்சி செல்வமணி வீட்டில் இருந்து எடுத்து வந்த பணம் ரூபாய் 20000 மற்றும் அவர் அணிந்திருந்த மோதிரம் கைப்பற்றப்பட்டது .
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்