திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வடமாதிமங்கலம் கூட்ரோட்டில் அடையாளம் தெரியாத 55 வயது பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் தலைமையில் கொலை சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் பெரிய ஏரியில் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்ணை மர்ம நபர்கள் பாறாங்கல்லை கொண்டு தலை நசுங்கிய நிலையில் இரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவல் அறிந்த களம்பூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வழக்கு பதிந்து, திருவண்ணாமலை மாவட்ட கைரேகை நிபுணர் சுந்தரராஜ் தலைமையில் மோப்ப நாய் மியாவை வரவழித்து போலீசார் தடயங்களை சேகரித்தனர்.
இறந்த பெண்னை சுற்றி அங்காங்கே இரத்தம் சிதறி கிடந்ததது கொலை செய்ய பயன்படுத்திய பாறாங்கல்லும் சுற்றிலும் இரத்தம் சிதறி கிடந்தது. மேலும் மோப்ப நாய் மியா அங்காங்கே சிதறி கிடந்த இரத்தத்தை முகர்ந்தபடி, பல இடங்களில் சுற்றி ஓடி, யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
ஏரியில் பெண்ணின் தலை மீது பாறாங்கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்