விருதுநகர்: கஞ்சா விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. திருவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
டி.எஸ்.பி உத்தரவின் பேரில், திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பாபு தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மங்காபுரம் அருகே ரோந்து பணியில் இருந்தபோது, சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அந்தப்பெண் அய்யம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வி (37) என்றும், அவர் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கஞ்சா மறைத்து வைத்திருந்த செல்வியை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி