இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திக்.IPS., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் தங்கச்சிமடம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.நாகசாந்தி அவர்கள் தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள 181, 1098. ஆகிய தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் புகார்களுக்கு காவல்துறையினரை எளிதில் தொடர்பு கொள்ளலாம் எனவும்,
18 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக செய்யப்படும் குற்றங்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் 18 வயது பூர்த்தியடையாத குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்..
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை