திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு , குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு மற்றும் அன்னை தெரசா டிரஸ்ட் , மக்கள் பாதுகாப்பு மையம் இணைந்து மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விளையாட்டு விழா மற்றும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் ,, காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் P. அஜீம் அவர்கள் தலைமை தாங்கினார் .பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் ,காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு கோலப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மற்றும் பொங்கல் விளையாட்டு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் ,குண்டு எறிதல், கபாடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி தலைமை உரை ஆற்றினார் .
பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மலர்விழி வரவேற்புரை ஆற்றினார் .மக்கள் பாதுகாப்பு மைய மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் ராணிமேரி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு குழந்தை நலன் சார்ந்த சட்டங்கள் ,குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கினர்.
மண்ணச்சநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சின்னப்பன் வாழ்த்துரை வழங்கினார். பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய காவல் ஆய்வாளர் P. அஜீம் அவர்கள், பள்ளிகல்வித்துறை உளவியல் ஆலோசகர் சுபாராமன் ,சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜியாவுதீன் ,திட்டம் 1 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரபாவதி மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபு ஆகியோருக்கு குழந்தைகள் நல பாதுகாப்பாளர் விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
மேலும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 10 9 8 என்பது குறித்து பெண் குழந்தைகளை வைத்து 1098 எண் வடிவம் உருவாக்கப்பட்டது . அன்னை தெரசா டிரஸ்ட் மேலாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் மாணவிகள் ,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி