திருவாரூர்: பெண் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் மனம் சார்ந்த உளவியல் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்காகவும், பணிமுறையை மேலும் செம்மைப்படுத்திக் கொள்ளும் விதமாகவும் குடும்பம் மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்ளும் விதமாகவும் TNUSRB அலுவலகத்தில் “பணிவழிகாட்டும் ஆலோசனைக் குழு” (Career Counselling Committee) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையை சேர்ந்த பெண் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் இக்குழுவை அணுகி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.