திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் சசிகலா என்ற பெண் காவலர் திரைப்பட பாடல் மெட்டில் தான் எழுதிய பாடலை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணியின்போது அவர் பாடியது அப்பகுதி வாசிகளை வெகுவாக கவர்ந்தது பெண் காவலரின் இசை ஆர்வத்தை கண்ட உயர் அதிகாரிகள் அவர் பாடியகொரோனா விழிப்புணர்வு பாடலை குறும் தகடாக தயாரித்தனர்.
அதனை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் வெளியிட முதல் பிரதியை பெண் காவலர் சசிகலா பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டிகாவல் ஆய்வாளர் சக்திவேல், உதவி ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர் அப்போது பெண் காவலர் சசிகலா விழிப்புணர்வு பாடலை பாடி அசத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்