கோவை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய குழு சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை தீயணைப்பு படையினருக்கான உடற்தகுதி தேர்வு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில்கடந்த வாரம் தொடங்கியது..
ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வு நடந்துமுடிந்தது.இதையடுத்து பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று காலையில் தொடங்கியது.முதலில் உயரம் கணக்கிடப்பட்டது.
பின்னர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது.இந்த 400 பெண்கள் பங்கேற்றனர்.இவர்களில் திருமணம் முடிந்த பெண்களும் வந்திருந்தனர்..
சில பெண்கள் குறிப்பிட்ட தூரத்தை ஓட முடியாமல் மயங்கிவிழுந்தனர்.அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.1500 மீட்டர் ஓட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் 100 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதல்போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வுப் பணிகளை கோவை சரக டி.ஐ.ஜிமுத்துசாமி பார்வையிட்டார். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.