காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் அனைவருக்கும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்கும் திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருமதி.தெ.சண்முகப் பிரியா, அவர்கள் தொடங்கி செயல்படுத்தி வருகிறார். அதில் முதல் கட்டமாக ஆயுதப்படை மற்றும் தாலுக்கா காவல் நிலையங்களில் பணிபுரியும் 5 பெண் காவலர்களுக்கு ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சி முடித்து அவர்களுக்கு வாகன ஓட்டுனர் உரிமம் பெறப்பட்டு அதை இன்று (19.12.2020) அவர்களுக்கு வழங்கி பாராட்டி கௌரவித்தார். விருப்பமுள்ள அனைத்து பெண் காவலர்களுக்கும் நான்கு சக்கர வாகனம் ஓட்ட பயிற்சி அளித்து அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தரப்படும் என தெரிவித்தார்.
பயிற்சி அளித்த ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சண்முகம் அவர்களை பாராட்டினார். மேலும் மாநில பேரிடர் படை பயிற்சியினை முடித்த காவல் ஆளிநர்களுக்கு சான்றிதழையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டினார். மாநில அளவில் நடைபெற்ற யோகாசனம் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த திரு.சுரேஷ், த.கா.1631, ஆயுதப்படை, காஞ்சிபுரம் அவர்களை வெகுவாக பாராட்டி கௌரவித்தார்.