குமரி: கன்னியாகுமரி நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இது சம்மந்தமாக இன்று கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியார்கள் என பெண் அமைச்சுப்பணியாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E. சுந்தரவதனம் IPS அவர்கள் மகளிர் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பெண் காவலர்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழவும், சிறப்பாக பணியாற்றவும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.யாங்சன் டோமா பூட்டியா அவர்கள் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த நிகழ்வின்போது உதவி காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.