சென்னை :கடந்த மார்ச் மாதம் முதல் திநகரில் ஊரடங்கு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தன் மகள் வீட்டிற்கு செல்ல முடியாமல் தனிமையில் தவித்துள்ளார் 80 வயது மூதாட்டி. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மூதாட்டியை ஹைதராபாத்தில் உள்ள தன் மகள் வீட்டுக்கு அனுப்பி வைக்க, அவரது அவர்களது உறவினர் சென்னை பெருநகர காவல் ஆர்.1 காவல்நிலையத்தை அணுகினர்.
இதனை அடுத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் மகாலட்சுமி மூதாட்டியை வீட்டிலிருந்து, விமான நிலையம் வரை அழைத்து சென்று அவரை பத்திரமாக விமானத்தில் அனுப்பி வைத்தார். இதனை அறிந்த சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் அகர்வால், காவலர் மகாலட்சுமியை நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினார்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை