சென்னை: சென்னை பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் அனுசுயா. இவருக்கு திருமணமாகி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி என்பதால் அவரை அழைத்து செல்ல அவரது பெற்றோர் வந்தனர். இந்த நிலையில் தங்களுடன் பனிபுரிந்த பெண் போலீஸ் அனுசுயா தங்களுடைய குடும்பத்தில் ஒருவராக நினைத்து அவருக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன் சீமந்தம் செய்து வைக்க போலீசார் முடிவு செய்து,
போலீஸ் நிலைய வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு சந்தனம், வளையல், பூ, மாலை அனிவித்தும் சீர்வரிசை பொருட்கள் வைத்தும் சீமந்த பாடலை சக பெண் போலீசார் பாடிய நிலையில் சீமந்த விழாவை நடத்தினார்கள்.