பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஏதேனும் ஒரு கிராமத்தில் ஒவ்வொரு நாளும் பெண்கள் மற்றம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஜெயசித்ரா அவர்கள் தலைமையில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று 20.08.2021-ம் தேதி மாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த துறையூர் சாலையில் சென்று கொணடிருந்த போது குரும்பலூர் கிராமம் காமராஜர் தெருவில் மக்கள் கூட்டமாக இருப்பதை கண்டு அருகில் சென்று பார்த்த காவல் ஆய்வாளர் திருமதி.ஜெயசித்ரா மற்றும் அவரது குழுவினர் அங்கு ஒரு நபர் நெஞ்சு வலியில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை அங்குள்ள மக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகனம் இல்லாமல் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து காத்திருப்பதை அறிந்து கொண்டார்.
இந்நிலையில் துரிதமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் மேற்படி நபர் ராஜா என்பவருக்கு முதலுதவி செய்து தனது காவல் வாகனத்திலேயே பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் பின்னர் மருத்துவமனைக்கு சென்ற காவல் ஆய்வாளர் மேற்படி நபர் ராஜாவின் உடல் நலம் குறித்து நலம் விசாரித்தார்.
நெஞ்சுவலியில் துடித்துக் கொண்டிருந்த ராஜாவின் நிலையை அறிந்து துரிதமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் திருமதி.ஜெயசித்ரா மற்றும் அவரது குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் மிகவும பாராட்டினார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை