சென்னை: சென்னை கலாஷேத்ரா காலனியில் இயங்கி வரும் M/s. Hygrevar Homes and Hearth Ltd என்ற கம்பெனியில் மார்கெட்டிங் மேனேஜராக பணிபுரிந்து வந்த யசோதா என்பவர் கடந்த 2008 ம் ஆண்டு மேற்படி நிறுவனத்தில் பிளாட்கள் புக் செய்த வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலித்துக் கொண்டு அவர்களுக்கு போலியான ரசீதுகள் தயார் செய்து கொடுத்து,
அவர்களிடம் பெற்ற ரூ. 20 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக கொடுத்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டதில், யசோதா என்பவர், M/s. Hygrevar Homes and Hearth Ltd என்ற நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்து அதற்கு போலியான ரசீது கொடுத்து கம்பெனி பணத்தை கையாடல் செய்தது உண்மையென தெரியவந்தது.
அதன்பேரில், யசோதா மீது கடந்த 2009 ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததின் பேரில் கனம் 11 வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சைதாப்பேட்டை நீதிபதி அவர்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, 11.10.2021 அன்று யசோதா 50. கோட்டூர்புரம் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5000/ – அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்