திருநெல்வேலி: ராமையன்பட்டியை சேர்ந்த பட்டு 30, என்பவரின் கணவர் 2019ம் வருடம் இறந்துவிட்டதால் தற்போது ராமையன்பட்டியில் உள்ள அவரது கணவர் வீட்டில் பட்டு வாழ்ந்து வருகிறார்.
தற்போது பட்டு ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவரிடம் இராமையன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம்(எ)கருத்தபாண்டி ஆனந்த் என்பவர் காதலிப்பதாக கூறி அடிக்கடி இருவரும் தொலைபேசியில் பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 22.11.2020 அன்று பட்டுவின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பட்டுவுடன் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் பட்டு கருவுற்றிருந்தார், மேற்படி பட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆறுமுகத்திடம் கேட்டபோது.
ஆறுமுகம் திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் பின்பு பட்டுவை ஆறுமுகத்தின் குடும்பத்தார் கருவை களைக்க அழைத்து சென்றபோது திடீரென்று பட்டுவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பட்டு திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திருமதி.ரசிதா அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பெண்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய ஆறுமுகம் என்ற கருத்தபாண்டி என்ற ஆனந்த் மற்றும் அவரது அண்ணன் வெள்ளபாண்டி இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.