தென்காசி : தென்காசி மாவட்டம், ஆய்க்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆய்க்குடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த மூக்கன் என்பவரின் மகன் செல்லப்பா என்பவர் கடந்த (24.11.2015), தேதி அன்று சுப்புலட்சுமி என்பவரை இடப் பிரச்சனை தொடர்பாக கம்பால் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக அப்போதைய காவல் ஆய்வாளர் திரு. ரகுராஜன், அவர்கள் வழக்கு பதிவு செய்து செல்லப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தார்.
இந்த வழக்கு விசாரணையானது தென்காசி முதன்மை அமர்வு உதவி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், விசாரணை நடை பெற்று வந்த நிலையில் (16.08.2022) ,வழக்கை விசாரித்த நீதிபதி திரு. ரஸ்கின் ராஜ் அவர்கள் குற்றம்சாட்டப்பட்ட செல்லப்பாவிற்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 3,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அரசு வழக்கறிஞர் திரு. மாரிகுட்டி
காவல் ஆய்வாளர் திருமதி. வேல்கனி மற்றும் தலைமை காவலர் முருகேஷ்வரன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS, அவர்கள் வெகுவாக பாராட்டினார்.