திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய சரகம் கீழக்கவுண்டம்பட்டி கீழுரைச் சேர்ந்த மாரியப்பன் வயது (35), என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய துணை செயலாளராக இருந்து வருகிறார். இவர், 28.07.17 ம் தேதியன்று திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் விளம்பர போஸ்டரை தன் வீட்டின் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் ஒட்டிய போது 28.07.17 ம் தேதி 7 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த கலைவாணன், அழகரசன், பூபதி, சுப்பிரமணியன், விஜய் ஆகிய வேறு சமூகத்தை சேர்ந்த 5 நபர்கள் போஸ்டரை கிழித்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக 30.07.17 ம் தேதி வாதி மாரியப்பன் தன் வீட்டின் முன்பு தனது அக்கா பார்வதி உடன் பேசிக் கொண்டிருந்த போது, மேற்கண்ட 5 நபர்களும், வாதி மாரியப்பனை குச்சியால் அடித்த போது, அதனை, தடுக்க வந்த பார்வதியை கையால் தாக்கி உள்ளனர்.
மேற்கண்ட சம்பவம் தொடர்பாக வாதி மாரியப்பன் 31.07.17 ம் தேதியன்று மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இன்று 02.12.19 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அவ்வழக்கின் எதிரிகளில் ஒருவரான கலைவாணன் வயது (23) என்பவர் மட்டும் குற்றவாளி எனவும், குற்றவாளிக்கு 2 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து நீதிபதி செல்வம் அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி