கோவை : கோவை ராமநாதபுரம் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மனைவி ராஜி ( 37 ).இவர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தீபம் மருத்துவமனையில் கேண்டின் நடத்தி வருகிறார். இவர் கொங்கு நகர் பகுதியில் புதிய வீடு ஒன்று கட்டிக் கொண்டிருந்தார். நேற்று தனது வீட்டின் பணிகளை தனியாக நின்று பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கே மதுபோதையில் வந்த வாலிபர் நீங்கள் யார் இங்கே என்ன செய்கிறீர்கள் என விசாரித்தார். இதைக் கேட்ட ராஜி பதில் எதுவும் சொல்லவில்லை. இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் திடீரென அந்தப் பெண்ணை கட்டிப்பிடித்தார். அவரை கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயன்றார். அதிர்ச்சி அடைந்த ராஜி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்திலிருந்த நபர்கள் அங்கே ஓடி வந்து அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் அவர் ராமநாதபுரம் போலீசில் ஒப்படைத்தனர் . விசாரணையில் அந்த நபர் ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி காமேஸ்வரன் (24) என தெரியவந்தது. போலீசார் காமேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்