திருச்சி: திருச்சி மாநகரில் கடந்த 11.08.2019-ந்தேதி ஏர்போர்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காந்திநகர் மெயின்ரோட்டில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துகிடப்பதாக அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்தும், புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வழக்கின் குற்றவாளியான ஏர்போர்ட் காந்திநகரை சேர்ந்த சிவசண்முகம் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, கடந்த 03.10.2019-ந்தேதி மேற்படி குற்றவாளி சிவசண்முகம் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். மேற்படி வழக்கில் மாண்புமிகு திருச்சி மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு.தங்கவேல் அவர்கள் நீதிமன்ற விசாரணையை முடித்து, இன்று 26.03.2024-ம்தேதி, மேற்படி குற்றவாளி சிவசண்முகத்திற்கு ச/பி 302 IPC-ன் படி ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் ரூ.5000/-ம், அபராதம் கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் திரு.ஆனந்தன் அவர்கள் ஆஜராகி அரசு சார்பாக வாதாடினார்கள்.இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அப்போதைய ஆய்வாளர் திரு.பெரியசாமி அவர்களையும், புலன்விசாரணையில் உறுதுணையாக இருந்த காவல் ஆளிநர்களையும், நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர் படுத்திய தற்போதைய ஏர்போர்ட் காவல் ஆய்வாளர் திரு.ராஜ்குமார் அவர்களையும் மற்றும் நீதிமன்ற பணிபுரிந்த காவல் ஆளிநர்களையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாரட்டினார்கள்.