திருச்சி : திருச்சி கடந்த (10.08.22)-ம்தேதி உறையூர் காவல்நிலைய பகுதியில் இராணுவத்தில் பணியாற்றும் நபரின் மகளை காணவில்லை என பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து, காணாமல்போனவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் மேற்படி இளம்பெண்னை சென்னையில் கண்டுபிடித்தும், அவரை தங்க நகை மற்றும் பணத்திற்காக திருவெறும்பூரை சேர்ந்த குற்றவாளி குட்லு, ரமேஷ், அரவிந்த், த.பெ.குமார் மற்றும் அவரது தாயார் ஆகியோர்கள் கடத்தியது தெரியவந்து, மேற்படி குற்றவாளிகளை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் விசாரணையில் குற்றவாளி குட்லு, ரமேஷ், அரவிந்த் மீது திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல்நிலையங்களில் அடிதடி, வழிப்பறி செய்ததாக 2 வழக்குகளும், கொலை முயற்சி ஈடுப்பட்டதாக 2 வழக்குகள் உட்பட் மொத்தம் 8 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது.
எனவே, குற்றவாளி குட்லு, ரமேஷ்,அரவிந்த், தொடர்ந்து கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுவதும், பொதுமக்களை அச்சுறுத்தியும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட குற்றவாளியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு உறையூர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள, குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.