பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலா கருணை இல்லத்தில் ஐந்து வருடமாக இருந்த லட்சுமி என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சை பெற்று சென்னை SCRB மூலம் அவரின் சொந்த ஊரான தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள அவரது கணவர் முகவரியில் தொடர்பு கொண்டு இன்று பெரம்பலூர் மாவட்ட *காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் வழிகாட்டுதலின் படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிடம் திரு. ஆரோக்கிய பிரகாசம் அவர்களது தலைமையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. வளவன், சென்னை SCRB காவல் ஆய்வாளர் திருமதி.தாஹீரா அவர்களின் முன்னிலையில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயசித்ரா குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு. சுப்ரமணியன் மற்றும் உதவி ஆய்வாளர் திருமதி.மாலதி, தலைமை காவலர்கள் திருமதி. சுகன்யா, திரு.மருதமுத்து ஆகியோர்கள் இணைந்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் வைத்து மேற்படி பெண்ணை அவரது குடும்பத்துடன் சேர்த்து வைத்தனர்.