இராமநாதபுரம்: கடந்த 2011-ம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ், த/பெ மணி, என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன், த/பெ பிச்சை என்பவருக்கும் இடையே ஏற்பட்ட இடத் தகராறில், அர்ஜுனன் மற்றும் ராஜா த/பெ அடைக்கலம் ஆகியோர் சேர்ந்து தர்மராஜை தாக்கி, மனைவியை அரிவாளால் வெட்டினர்.
இது தொடர்பாக அர்ச்சுனன் மற்றும் ராஜா மீது இளஞ்செம்பூர் காவல் நிலைய குற்ற எண்: 33/2011 u/s 147, 148, 341, 294(b), 324, 326, 506(ii) IPC-ன் பிரகாரம் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை முடிந்து நேற்று 24.09.2019-ம் தேதி முதுகுளத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு.ராம்சங்கரன் அவர்கள் மேற்படி எதிரிகளான அர்ச்சுனன் என்பவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 2,000/- ரூபாய் அபராதமும், ராஜா என்பவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், 1,000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்கள்.