சேலம் : சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மகன் கோபிநாத்(42) என்பவர் வங்கியில் வாங்கிய கடனை அடைப்பதற்காக, டிராவல்ஸ் பேக்கில் பணம் ரூ.91,500/-, ரூ12,000/- மதிப்புள்ள VIVO செல் போன் ஒன்று, பேங்க் பாஸ்புக் மற்றும் பள்ளி சான்றிதழ்கள் ஆகியவை அடங்கிய பையை வங்கிக்கு இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற போது, வழியில் எங்கோ தவறிவிட்டதாக அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.சம்பத் ஆகியோர் விரைவாக புலன் விசாரணை மேற்கொண்டு, அவர் தவற விட்டதாக கூறிய வழியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது சேலம் மாநகரம் கருங்கல்பட்டியை சேர்ந்த திருமதி.A.தீபா என்பவர் பையை எடுத்து சென்றதை கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் மேற்படி தீபா அவர்கள் பள்ளி சான்றிதழ்களை வைத்து விசாரித்து பணப்பையை உரியவரிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றபோது, போலீசார் அப்பெண் வைத்திருந்த பையை வாங்கி பரிசோதித்தபோது, மேற்படி நபர் தவறவிட்ட பணம் மற்றும் செல்போன் போன்றவைகள் அப்படியே இருந்தன. மேற்படி தீபா அவர்கள் யாரோ வழியில் தவறவிட்ட பணப்பையை உரியவரிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்ற அவரின் நேர்மையை பாராட்டி அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் அவர்கள் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் தவறவிட்ட பணப்பையை அவர் கையாலேயே அன்னதானப்பட்டி போலீசார் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தார்.