கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட N.தட்டக்கல் கிராமத்தில் மலர்மதி என்பவர் வசித்து வருவதாகவும், தனது கணவர் லாரி டிரைவராக வேலை செய்து வருவதாகவும், 13.03.2024ஆம்தேதி இரவு சுமார் 20.45 மணிக்கு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் காரிமங்கலத்திற்கு சென்று திரும்பி வீட்டுக்கு வரும்போது
தனக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தன் மீது உரசுவது போல் வந்து தனது கழுத்தில் அணிந்திருந்த சுமார் நான்கு பவுன் தங்க செயினை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் போச்சம்பள்ளி பக்கமாக சென்றதாகவும், தான் திருடன் திருடன் என சத்தம் போட்டவுடன் அக்கம் பக்கம் இருந்தவர்கள் துரத்தியும் பிடிக்க முடியவில்லை என்றும் கூறி மலர்மதி நாகரசம்பட்டி காவல் நிலையம் ஆஜராகி 20.03.2024ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து செயினை பறித்து சென்ற நபரை கைது செய்து அவரிடமிருந்து தங்க செயினை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.