கோவை: கோவை பீளமேடு ஜெய் நகரை சேர்ந்தவர் வளர்மதி 45 நேற்று காலையில் இவர் அங்குள்ள ரோட்டில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்
.அப்போது அந்த வழியாக வந்த இரு ஆசாமிகள் முகவரி கேட்பது போல் அருகில் சென்று அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து வளர்மதி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்