கோவை: வெங்கடசாமி ரோட்டை சேர்ந்தவர் யுவராஜ் 49. இவரது மாமியார் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் அவரிடம் முகவரி கேட்பது போல நடித்து அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அவரது மருமகன் யுவராஜ் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கில் தப்பி 2 ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்