விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம், 5 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற 2 மர்ம ஆசாமிகள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விஜயபுரி பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து 65, இவரது மனைவி சண்முகசுந்தரி 60. இவர்கள் இருவரும் சாத்தூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக சாத்தூருக்கு வந்தனர்.
திருமண மண்டபத்திற்கு கணவன், மனைவி இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம ஆசாமிகள் சண்முகசுந்தரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.
இது குறித்து சண்முகசுந்தரி சாத்தூர் தாலுகா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.