கோவை: கோவை பக்கமுள்ள சின்னவேடம்பட்டியில் வசிப்பவர் கவிதா 23.இவர் இன்று காலையில் கடைக்கு முன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இது குறித்து கவிதா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்