மதுரை: மண்டேலா நகர் பெரியார் டவுன் பஸ்சில் பெண்ணிடம் 20பவுன் நகை அபேஸ்:
3 பெண்களுக்கு வலைவீச்சு:மதுரை மண்டேலா நிரிலிருந்து பெரியார் செல்லும் டவுன் பஸ்சில் பெண்ணிடம் 20பவுன் நகை அபேஸ் செய்த 3 பெண்களை போலீசார் தேடி
வருகின்றனர்.தஞ்சாவூர் சுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி மனைவி ருக்மணி 36. இவர், அருப்புக்கோட்டையில் உறவினர் வீட்டுக்கு சென்று வீட்டு, காதுகுத்து நிகழ்ச்சியில் கலந்துவிட்டு, ஊருக்கு திரும்பினார்.
அவர் மண்டலே நகரில் இறங்கி அங்கிருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லும் பஸ்ஸில் பயணித்தார். அப்போது, அவரிடம் சுடிதார் அணிந்த மூன்று பெண்கள் கைக்
குழந்தையுடன் பயணித்தனர். அவர்கள் ,ருக்குமணி தன் பேக்கில் வைத்து இருந்த 20 பவுன் தங்க நகையை அபேஸ் செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து, ருக்மணி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார்.இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை திருடிய மூன்று பெண்களையும் தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி