கோவை: கோவை ஸ்ரீபதி நகரைச் சேர்ந்தவர் வசந்தி 54 . ஒரு டாக்டர் வீட்டில் வேலை செய்து வருகிறார் .நேற்று இவர் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு டிப்-டாப் உடை அணிந்து நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் உங்களுக்கு நான் உதவி செய்கிறேன் என்று கூறி அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டை வாங்கிநான் பணம் எடுத்து தருகிறேன் என்று கூறினாராம்,
இதை நம்பி அந்த கார்டை அவரிடம் கொடுத்தார்.சிறிது நேரத்தில் மற்றொரு கார்டை வசந்தியிடம் மாற்றி கொடுத்துவிட்டு தற்போது பணம் வருவதில்லை .சிறிது நேரம் கழித்து வாருங்கள் என்று கூறினார் .
வசந்தியும் வீட்டுக்கு சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு ஏடிஎம் மையத்தில் அவரது வங்கி கணக்கில் ரூ.16 ஆயிரம் எடுத்து இருப்பதாக தகவல் வந்தது.வசந்தி தனது ஏ.டி.எம்.கார்டை பார்த்தபோது அது அவரது காரடு இல்லை என்பது தெரியவந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் ஏடிஎம் கார்டை மாற்றி அந்த ஆசாமி இந்த மோசடியை செய்துள்ளார் இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் மர்ம ஆசாமி யை தேடி வருகிறார்கள்.