திருநெல்வேலி: வீரவநல்லூரை சேர்ந்த இசக்கியம்மாள்70, வீரவநல்லூர் பாரதி நகரில் உள்ள கடையில் பால் வாங்கி விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் இசக்கியம்மாள் கழுத்திலிருந்த 45.5கிராம் தங்கச் செயினை பறித்துச் சென்றார்.
இதுகுறித்து இசக்கியம்மாள் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் உதவி ஆய்வாளர் திரு.காவுராஜன், அவர்கள், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடிவந்த நிலையில் தங்கச் செயினை பறித்துச் சென்றது
வி.கே.புரம் கல்சுண்டு காலனியைச் சேர்ந்த விஷ்ணு 28. என்பது தெரியவந்தது. மேற்படி குற்றவாளியை இன்று உதவி ஆய்வாளர் அவர்கள் கைது செய்தார்.மேலும் குற்றவாளியிடமிருந்து 45.5கிராம் தங்க செயினை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்