திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராஜாமணிக்கம் இவரது மனைவி அமுதவள்ளி வயது 51 இவர்கடந்த 26 ஆம் தேதி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திருச்சி செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்தார்.அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பவுன் தங்க சங்கிலியை பரித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து நகர் வடக்கு காவல் துறை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இந்நிலையில் தங்க நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளர். திரு.பிரதீப் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து ஏ.எஸ்.பி.சிபின் மேற்பார்வையில்,நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர். திரு.வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர். திரு. சரத்குமார், குற்றப்பிரிவு காவல் சிறப்பு சப் சார்பு ஆய்வாளர்கள். திரு.வீரபாண்டியன், திரு. ஜார்ஜ் எட்வர்ட் மற்றும் காவல் துறையினர் மதுரை பசுமலையைச் சேர்ந்த பவின் கிளிண்டன் என்பவரை கைது செய்தனர்.மேலும் திருடி சென்ற நகையினை பறிமுதல் செய்தனர்.பவின் கிளிண்டன் மீது மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் நகைபறிப்பு குற்றம் குறித்து வழக்கு நிலுவையில் இருந்தது தெரியவந்தது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா