இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள பெருங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த முகைதீன் பாட்ஷா என்பவர் கழுத்தில் கிடந்த கவரிங் நகையை தங்க நகை என நினைத்து பறித்து செல்லும் போது.
அப்பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு அருகில் நின்றவர்கள் ஓடிச் சென்று, தப்பிக்க முயன்ற முகைதீன் பாட்ஷாவை பிடித்து உச்சிப்புளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேற்படி, நபர் மீது உச்சிப்புளி சார்பு ஆய்வாளர் திரு.நாகநாதன் அவர்கள் U/S 392,511 IPC – ன் கீழ் வழக்கு பதிவு செய்து அந்நபரை கைது செய்தார்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை