தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் ஜவுளி நிறுவன மில்லில் மேலாளராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் கடந்த (30.11.2022), அன்று மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணிநகர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மேற்படி பெண்ணின் செல்போனை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நேற்று (01.12.2022) அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து காவல் ஆய்வாளர் திரு. அய்யப்பன், மற்றும் தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி கே.வி.கே நகரைச் சேர்ந்த கணேசன் மகன் அருள் முத்துமணி (24) மற்றும் தூத்துக்குடி சக்திவிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த இருளப்பன் மகன் மணிகண்டன் (27) ஆகிய இருவரும் மேற்படி பெண்ணிடம் செல்போனை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக மத்திய பாகம் காவல் நிலைய போலீசார் குற்றவாளிகள் அருள் முத்துமணி மற்றும் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 90,000/- மதிப்புள்ள கொள்ளையடிக்கப்பட்ட செல்போனையும் பறிமுதல் செய்தனர்.